×

ஈரானின் மேற்கு கோகிலுயே வா பாயெரஹ்மத் மாகாணத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.6-ஆக பதிவு

ஈரான்: ஈரானின் மேற்கு கோகிலுயே வா பாயெரஹ்மத் மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 5.6-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாகவும் அதில் 40-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில் இயற்கை சீற்றங்களும் அதிக அளவில் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சுனாமி சூறாவளி காற்று போன்ற மற்ற இயற்கை சீற்றங்களை விட நிலநடுக்கம் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக ஏற்படும் கொண்டே இருக்கிறது.

ஈரானில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானின் மேற்கு கோகிலுயே வா பாயெரஹ்மத் மாகாணத்தில் உள்ள சிசாக் நகரத்தில் இன்று காலை 10.02 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனவே இந்த நிடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி எதுவும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. மேலும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

Tags : Quake ,Iran ,province ,Gokul-e-Bayerrahmat , Iran quake 5.6 on the Richter scale
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...