×

பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டு உள்ள நிலையில் இன்றிரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

புதுவை: இன்றிரவு எம்.எல்.ஏ.க்களுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்த உள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டு உள்ள நிலையில் இன்றிரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். காங்கிரஸ், திமுக. எம்எல்ஏக்களுடன் இன்றிரவு ஆலோசனை நடத்த உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தகவல் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளார். கட்சி தாவல் நடவடிக்கை காரணமாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது. சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

அதைத்தொடர்ந்து மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டி இழந்துள்ள நிலையில் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஆனால், அவர்களின் கோரிக்கை நியாயமானதல்ல, எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம் என முதல்வர் நாராயண சாமி தெரிவித்தார். புதுச்சேரியில் பிப்.22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டசபையில்  பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமி அரசுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டு உள்ளார்.

Tags : Narayanasamy ,Congress MLAs ,governor , Majority, to prove, Governor, MLAs, Narayanasamy, Consultation
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை