×

''கூகுள் மேப் பொய் சொல்லாது''என நம்பி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வழி மாறிப்போன நடிகர் அஜித்

சென்னை: நடிகர் அஜித் கூகுள் மேப் மூலம் இடமாறி திடீரென சென்னை காவல் ஆணையர் அலுலக வளாகத்திற்குள் சென்றதால் அங்கு கூட்டம் கூடியது. நடிகர் அஜித் அரைக்கால் சட்டையுடன் முகக்கவசம் அணிந்தவாறு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அரைக்கால் சட்டையுடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முகக்கவசத்தை கழற்றியதும் அவரை போலீசார் அடையாளம் கண்டுகொண்டனர். இதையடுத்து போலீசார் மற்றும் புகார் அளிக்க வந்திருந்த பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு அவருடன் உற்சாகத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ரைபிள் கிளப்பில் உறுப்பினராக உள்ள அஜித் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்று வருகிறார். அங்கு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலை வீட்டில் இருந்து கால்டாக்சியில் கிளம்பிய அஜித் கூகுள் மேப் மூலம் இடம்மாறி வேப்பேரி புதிய காவல் ஆணையர் அலுவலகம் சென்றுள்ளார். அஜித்திடம் மாறி வந்ததை போலீசார் எடுத்துக்கூறியதை அடுத்து அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Tags : Ajith ,office ,Commissioner of Police , Ajith goes to Commissioner of Police office through Google Map: Police, people surround Ajith and take selfie
× RELATED மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், பயிற்சி வகுப்பு