×

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையுடன் முதல்வர் நாராயணசாமி சந்திப்பு: மாநில நிர்வாகம் தொடர்பாக சந்தித்ததாக முதல்வர் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையுடன் மாநில முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசி வருகிறார். நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு இன்னும் 3 மாதம் பதவி காலம் உள்ளது. அதற்குள், அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் அடுத்தது ராஜினாமா செய்தனர். ஏற்கனவே ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் 10 ஆக குறைந்தது. காங்கிரஸ் சபாநாயகர் என்பது குறிப்பிடத்தகது. அதேவேளையில், திமுக 3, ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆதரவுடன் ஆளுங்கட்சியின் பலம் 14 ஆக இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் வரிசையில் என்.ஆர். காங்கிரஸ்-7, அதிமுக-4, நியமன எம்எல்ஏக்கள் 3 (பாஜக) என மொத்தம் 14 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டி இழந்துள்ள நிலையில் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அவர்களின் கோரிக்கை நியாயமானதல்ல, எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம் என முதல்வர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, நேற்று, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக  எம்எல்ஏக்கள், பாஜக நியமன எம்எல்ஏக்கள் புதுச்சேரி கவர்னரின் செயலர் சுந்தரேசன், சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் ஆகியோரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரும் மனுவை வழங்கினர். இதில் 14 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டிருந்தனர். இதற்கிடையே, இன்று புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். இந்நிலையில்,  புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை ஆளுநர் மாளிகையில் எதிர்க்கட்சித் தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையுடன் மாநில முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அரசு நிர்வாகம் தொடர்பாக தமிழிசையுடன் விவாதித்தேன் என கூறினார்.

Tags : Narayanasamy ,Puducherry ,Tamilisai ,Chief Minister ,state administration , Chief Minister Narayanasamy meets Puducherry Deputy Governor Tamilisai: Chief Minister's interview on state administration
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை