×

புதுச்சேரி அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு: ஆளுநர் மாளிகையில் தமிழிசை சவுந்தரராஜனுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு.!!!

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, திமுக 3 மற்றும் சுயேட்சை 1 ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு இன்னும் 3 மாதம் பதவி காலம் உள்ளது. அதற்குள், அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் அடுத்தது ராஜினாமா செய்தனர்.

ஏற்கனவே ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் 10 ஆக குறைந்தது. காங்கிரஸ் சபாநாயகர் என்பது குறிப்பிடத்தகது. அதேவேளையில், திமுக 3, ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆதரவுடன் ஆளுங்கட்சியின் பலம் 14 ஆக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் வரிசையில் என்.ஆர். காங்கிரஸ்-7, அதிமுக-4, நியமன எம்எல்ஏக்கள் 3 (பாஜக) என மொத்தம் 14 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டி இழந்துள்ள நிலையில் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அவர்களின் கோரிக்கை நியாயமானதல்ல, எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம் என முதல்வர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, நேற்று, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக  எம்எல்ஏக்கள், பாஜக நியமன எம்எல்ஏக்கள் புதுச்சேரி கவர்னரின் செயலர் சுந்தரேசன், சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் ஆகியோரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரும் மனுவை வழங்கினர். இதில் 14 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

இதற்கிடையே, இன்று புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். இந்நிலையில்,  புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை ஆளுநர் மாளிகையில் எதிர்க்கட்சித் தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக  எம்எல்ஏக்கள், பாஜக நியமன எம்எல்ஏக்கள் ஆளுநர் தமிழிசை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது, ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிருபிக்க உத்தரவிட கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, புதுச்சேரி ஆளுநராக பதவியேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது; புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் வழங்கிய மனுவை பார்க்க உள்ளேன். என்னை சந்தித்துப் பேச வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எனக்கு எந்த சார்பும் கிடையாது; நான் சமமாக நடந்துகொள்வேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Opposition leaders ,Puducherry ,Tamilisai Saundarajan ,Governor ,House. , Continuing turmoil in Puducherry politics: Opposition leaders meet with Tamilisai Saundarajan at the Governor's House !!!
× RELATED பாஜகவில் சேர்ந்தோரின் ஊழல் வழக்கு முடித்துவைப்பு..!!