×

வங்காளத்தில் மம்தாவை நீக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல; மாநில ஏழைகளின் நிலை மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்: அமித்ஷா பிரச்சாரம்.!!!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிலைமையில் மாற்றம் கொண்டு வருவதற்காக போராட்டம் இது என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 5 மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த முறை மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க  வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனது. இந்நிலையில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் கக்ட்விப்பில் ஐந்தாவது பரிவர்த்தன் (மாற்றத்துக்கான) யாத்திரையை பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித்ஷா, வங்காளத்தை சோனார் பங்களா ஆக்குவதற்கான பாஜகவின் போராட்டம் இது. இந்த சண்டை எங்கள் பூத் தொழிலாளர்களுக்கும் டி.எம்.சியின் சிண்டிகேட் நிறுவனத்திற்கும் இடையில் உள்ளது. மம்தா பானர்ஜியின் அரசாங்கத்தை நீக்கிய பின்னர் பாஜக அரசைக் கொண்டுவருவது எங்கள் நோக்கம் அல்ல. மேற்கு வங்கத்தில் நிலைமையில் மாற்றம், மாநில ஏழைகளின் நிலைமையில் மாற்றம், மாநில பெண்களின் நிலைமையில் மாற்றம் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள் என்றார்.

இது அதிகார மாற்றம் அல்ல, இது கங்காசாகருக்கு மரியாதை கொடுப்பது, பிராந்தியத்தின் மீனவர்களில் மாற்றத்தைக் கொண்டுவருவது பற்றியது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அரசு இருக்கும் வரை சட்டம் ஒழுங்கு நிலைமை நன்றாக இருக்க முடியுமா? வங்காளம் முன்னேற்றப் பாதையில் நடக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாஜக அரசு 33% க்கும் அதிகமான இடஒதுக்கீடு வழங்கும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.


Tags : Mamata ,Bengal ,Amitsha ,state , It is not the intention to remove Mamata in Bengal; Our aim is to change the condition of the state poor: Amitsha campaign !!!
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி