பேஸ்புக்கில் செய்திகளை பகிர்வதற்கு கட்டணம் வசூலிக்கும் ஆஸ்திரேலியாவின் திட்டம் எதிரொலி : செய்திகளை படிக்கும், பகிறும் வசதிகளை முடக்கியது நிறுவனம்

சிட்னி : ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோர் அந்நாட்டில் வெளியாகும் செய்திகளை பார்க்கும், பகிறும் வசதிகளை அந்நிறுவனம் முடக்கி உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து செயல்படும் செய்தி நிறுவனங்களால் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்கள் ஆதாயம் அடைந்து வருவதாக ஆஸ்திரேலியா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. எனவே சமூக மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் நாட்டு நிறுவனங்களின் செய்திகளை பகிர கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் ஆஸ்திரேலியா பயனாளிகள் அந்நாட்டில் இருந்து வெளியாகும் செய்திகளை பார்க்கும் பகிரும் வசதிகளை பேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது. இதனால் பேஸ்புக் மூலம் செய்திகளை பார்க்க முடியாத நிலைக்கு, ஆஸ்திரேலியா மக்கள் ஆளாகி உள்ளனர். பேஸ்புக் நிறுவனத்தின் இந்த திடீர் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது

. இது குறித்து கருத்து தெரிவித்த நிதித்துறை செயலர் ஜோஸ்,பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை முற்றிலும் தவறானது. செய்தியை படிக்கும் பகிறும் வசதிகளை முடக்கி இருப்பது தேவையில்லாத நடவடிக்கை. இது ஆஸ்திரேலியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாக இருக்கிறது, என்றார். பேஸ்புக்கின் நடவடிக்கையால் கோவிட் 19 கிருமி தொற்று, காட்டுத் தீ, சூறாவளி, அவசர நிலை ஆகியவற்றை பற்றி பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் பல்வேறு முக்கிய தனியார் நிறுவனங்களின் பக்கங்களும் முடங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பேஸ்புக் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டுள்ள ஆஸ்திரேலிய அரசின் உயர் அதிகாரிகள் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>