×

இளைஞர்களின் வாக்குகளை கவர வதோதராவில் ‘டேட்டிங்’ மையங்கள் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பரபரப்பு

வதோதரா:குஜராத்தில் இளைஞர்களின் வாக்குகளை கவர வதோதராவில் டேட்டிங் மையங்கள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் வதோதரா உள்ள 6 மாநகராட்சித் தேர்தல்களுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஆளும் பாஜகவும், காங்கிரசும் போட்டி போட்டு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. இளம்  வாக்காளர்களை ஈர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியூட்டும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வதோதரா காங்கிரஸ் தலைவர் பிரசாந்த் படேல் கூறுகையில், ‘இளைஞர்களின்  வாக்குகளை கவரும் வகையில் ‘டேட்டிங்’ (ஆண் - ெபண் ஒன்றாக தங்கள் விருப்பப்படி இருத்தல்) மையங்கள் வதோதராவை அடுத்த சன்ஸ்காரி நகரத்தில் அமைக்கப்படும். இங்கு பணக்கார இளைஞர்கள் மட்டுமே அனுமதிக்கபடுகின்றனர்.

இங்குள்ள ‘கபே’ மையத்தை அரசு மூடிவிட்டது. திறந்து இருந்தால் கூட, ஏழை மற்றும் நடுத்தர வர்க்க இளைஞர்கள் அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு உட்கார இடம் கிடைக்காது. இளைஞர்கள் சமமாக  பழக இந்த வசதிகள் செய்து தரப்படும். யாருக்கும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது. அதனால் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், சன்ஸ்காரி நகரத்தில் டேட்டிங் மையங்கள் உருவாக்கப்படும். இங்குள்ள  தோட்டங்கள் குழந்தைகள் விளையாடுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் வடிவமைக்கப்படும்’ என்று தெரிவித்தார். இளைஞர்களின் வாக்குகளை கவர காங்கிரஸ் வேட்பாளர்கள் டேட்டிங் மையங்கள்  உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளதால், பாஜக இளைஞர்கள் வாக்குகளை கவர தடுமாறி வருகிறது. அதனால் வதோதரா தேர்தல் பிரசாரம் இளைஞர்கள் மத்தியில் சூடுபிடித்துள்ளது.

Tags : centers ,Vadodara ,Congress ,Sensation , காங்கிரஸ்
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி