அதிமுக-பாஜக கூட்டணி பற்றி பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் யோசிப்பது நலம் : திருமுருகன்காந்தி ட்வீட்

டெல்லி : ’’அதிமுக-பாஜக கூட்டணி பற்றி பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் யோசிப்பது நலம்’’ என்று மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் 2 தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.3 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில்,2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த 2 சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலாத்காரம் செய்யப்பட்ட மற்றொரு சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 3 சிறுமிகளும் 13,16,17 வயதுடையவர்கள் ஆவர்.உறவினர்களான 3 சிறுமிகளும் கால்நடைகளுக்கு உணவு எடுத்து வர வயலுக்கு சென்ற போது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் போலீஸ் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த 2 சிறுமிகள் உள்பட 3 பேரும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், மீட்கப்பட்டனர்.  

உன்னாவ் பகுதியில் ஏற்கனவே நடந்த பாலியல் வன்கொடுமைகள் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மூன்று தலித் சிறுமிகளுக்கு நேர்ந்த இந்த கொடூரமும் நாடெங்கிலும் கொந்தளித்த வைத்திருக்கிறது.பாஜக ஆளும் அரசினால் உத்தரபிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், ‘’உத்திரபிரதேச உன்னாவ் பகுதியில் 3 தலித் சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருவர் கொலை, ஒருவர் உயிருக்கு போராடுகிறார். 12,16 வயது குழந்தைகள் இறந்துபோயினர். பாஜகவின் ராமராஜ்ஜிய ஆட்சியின் யோக்கியதை இது. பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அதிமுக-பாஜக கூட்டணி பற்றி யோசிப்பது நலம்’’என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>