×

சட்டசபை தேர்தல்!: தேமுதிக சார்பில் போட்டியிட பிப். 25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம்.. விஜயகாந்த் அறிவிப்பு..!!

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து 25ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று தேமுதிக அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் - மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. நேற்று முதல் திமுக-வின் விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. இதேபோல் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகின்றவர்கள் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்பமனுக்கள் அளிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து வரும் 25ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் பூர்த்திசெய்யப்பட்ட மனுக்கள் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டு பூர்த்திசெய்து கொடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட15 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரியில் 10 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக அதிமுக கூட்டணியில் இருக்கிறதா? தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? என்பது இன்னும் தெரியாத நிலையில் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25 முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று தேமுதிக கூறியுள்ளது.

Tags : Assembly Election ,Temujin. 25 ,Vijaykanth , Assembly Election, Temujin, Feb. 25, Viruppamanu, Vijayakant
× RELATED அருணாச்சலப்பிரதேசம் மற்றும் சிக்கிம்...