×

நகை வாங்க செம வாய்ப்பு... ஒரு சவரன் ரூ. 35,000த்திற்கும் கீழ் குறைகிறது.. இல்லத்தரசிகள் குஷி!!

சென்னை : சென்னையில் இன்று தங்கம் விலை 112  ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் முழுவதும் தங்கம் விலை உச்சத்திலேயே இருந்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு முதல் வாரத்தில் தங்கம் விலை கணிசமான அளவில் குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்தது. அதே போல் இன்றும் நல்ல செய்தியாக தங்கம் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்...

சென்னையில் இன்று (பிப்ரவரி 18) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,380 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,394ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று 35,712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 112 ரூபாய் குறைந்து 35,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.73.60 ஆக இருந்தது. இன்று அது ரூ.74 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 74,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : shaver ,Rs , சவரன்
× RELATED வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம்...