×

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வி.. விவசாயிகளுக்கு வாக்குரிமை இருக்கிறது என்பதை மோடி அரசு மறந்து விட்டதாக ப.சிதம்பரம் சாடல்!

சென்னை : பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸின் வெற்றியை சுட்டிக்காட்டி இருக்கக் கூடிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக எதிர்வரும் தேர்தல்களிலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் மொத்தம் உள்ள 8 மாநகராட்சிகளில் 7 மாநகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. தள்ளி வைக்கப்பட்டுள்ள மொகாலி மாநகராட்சி தேர்தல் முடிவு இன்று வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை கொண்டு வந்த பாஜக அரசுக்கு எதிரான மக்களின் மனநிலையை இந்த வெற்றி காட்டுவதாக அவர்கள் கூறி இருக்கின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பஞ்சாப் விவசாயிகளுக்கு வாக்குரிமை இருக்கிறது என்பதை மத்திய அரசு மறந்து விட்டது. நாங்கள் இருக்கிறோம், வாக்களிக்போம் என்று மோடி அரசுக்கு நினைவுபடு்த்திய பஞ்சாப் வாக்காளர்களுக்கு நன்றி.இளைஞர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வாக்குரிமை இருக்கிறது. திஷா ரவி, நிகிடா ஜேகப் மற்றும் JNU, AMU மாணவர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக எதிர்வரும் எந்தத் தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

இதே போல் பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைத்த வெற்றி ஒவ்வொரு பஞ்சாபி உடையது என்று கூறியுள்ளார். வெறுப்பு அரசியல் மற்றும் ஏமாற்று அரசியலை பஞ்சாப் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : BJP ,body elections ,Punjab ,government ,Modi ,P. Chidambaram , ப.சிதம்பரம்
× RELATED பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு பா.ஜ...