×

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் 2 தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை!.. மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை!!

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் 2 தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.3 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில்,2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த 2 சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.பலாத்காரம் செய்யப்பட்ட மற்றொரு சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 3 சிறுமிகளும் 13,16,17 வயதுடையவர்கள் ஆவர்.உறவினர்களான 3 சிறுமிகளும் கால்நடைகளுக்கு உணவு எடுத்து வர வயலுக்கு சென்ற போது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் போலீஸ் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த 2 சிறுமிகள் உள்பட 3 பேரும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், மீட்கப்பட்டனர். 


Tags : girls ,Uttar Pradesh ,Unna , பாலியல் பலாத்காரம்
× RELATED உ.பி.யில் திருமண ஊர்வலத்திற்காக காரை...