20 பேர் உயிர்களை பறித்த சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து : ஆலை உரிமையாளர் கைது!

சாத்தூர் : சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 12 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளத்தில் தனியார் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 20 பேர் உடல் கருகி பலியாகினர்.20 பேர் உயிர்களைப் பறித்த சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சந்தனமாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே குத்தகைதாரர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆலை உரிமையாளர் சந்தனமாரியை கைது செய்து, போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>