×

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் அமோகம் 7 மாநகராட்சிகளை கைப்பற்றியது காங்கிரஸ்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 8 மாநகராட்சிகளுக்கு கடந்த 14ம் தேதி தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில்,  பஞ்சாபில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 8 மாநகராட்சிகளில் 7 மாநகராட்சிகளை அது கைப்பற்றியது. பதிண்டா, மொகர், கோஷிபூர், பதன்கோட் உள்ளிட்ட 7 மாநகராட்சிகள் இதில் அடங்கும். மொகலி மாநகராட்சிக்கு உட்பட்ட 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டதால், இந்த மாநகராட்சியின் வாக்கு எண்ணிக்கை மட்டும் இன்று நடக்கிறது. வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப்பில் உருவான எதிர்ப்பு, பாஜ கூட்டணியில் இருந்து சிரோண்மணி அகாலி தளம் விலகியது போன்றவை பாஜ.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Punjab ,body elections ,corporations ,Congress , Punjab local body elections: Congress captures 7 corporations
× RELATED டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்