×

வெள்ளை மாளிகை ஒரு தங்க கூண்டு… அதிபர் வாழ்க்கை பற்றி பைடன் கலகலப்பு

வாஷிங்டன்: வெள்ளை மாளிகைக்கு குடியேறி ஒரு மாதம் முடியும் நிலையில், ‘அது ஒரு தங்கக் கூண்டு’ என்று நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார் அதிபர் ஜோ பைடன். அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ தங்குமிடமாக வெள்ளை மாளிகை உள்ளது. கிபி 1800ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. பென்சில்வேனியா பகுதியில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் பிரதான அடையாளமாகவும் உள்ளது. மெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடன், கடந்த ஜனவரி 20ம் தேதி வெள்ளை மாளிகையில் குடியேறினார். அதற்கு முன்பு டெலாவரிலுள்ள தனது பிரமாண்ட வீட்டில் வசித்து வந்தார். அதிபராக பதவியேற்று ஒரு மாதம் முடியும் நிலையில், வெள்ளை மாளிகை வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று ஒரு நிருபர் பைடனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு கலகலப்பாக பதிலளித்தார் பைடன்.

‘‘பொதுவாகவே நிறைய சம்பிரதாயங்களும், கட்டுப்பாடுகளும் நிறைந்த இடமாக வெள்ளை மாளிகை உள்ளது. இதனால், அது ஒரு தங்கக்கூண்டு என்றுதான் சொல்ல வேண்டும். காலையில் தூங்கி எழுந்தவுடன் என் மனைவி ஜில் பைடனிடம், ‘இங்கே எப்படி நாம் வந்தோம்?’ என்றும் கேட்பதுண்டு. அதேபோல், நான் அமெரிக்க அதிபர் என்பதையும் சிரமப்பட்டு திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொண்டு விழிப்போடு இருக்க முயல்கிறேன்,’’ என்றும் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
இத்தனைக்கும் வெள்ளை மாளிகையைப் புதிதாகப் பார்ப்பவர் இல்லை பைடன். ஏற்கனவே ஒபாமா நிர்வாகத்தில் 4 ஆண்டுகள் துணை அதிபராகப் பதவி வகித்து வந்தவர்தான். 80 ஏக்கரில் அமைந்துள்ள துணை அதிபரின் இல்லமும் அனைத்து வசதிகளும், கட்டுப்பாடுகளும் நிறைந்ததுதான். ஆனால், வெள்ளை மாளிகையின் அதிபரின் இல்லமுள்ள தங்குமிடத்துக்கு இதுவரை நான் வந்தது இல்லை என்றும் அதற்கான காரணத்தைக் கூறியுள்ளார். காலையில் தூங்கி எழுந்தவுடன் என் மனைவி ஜில்லிடம், ‘இங்கே எப்படி நாம் வந்தோம்?’ என்றும் கேட்பதுண்டு

Tags : White House ,Biden ,Chancellor , The White House is a golden cage பை Biden lively about the life of the Chancellor
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை