×

தேமுதிகவிடம் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ராயபுரம் சட்டமன்ற அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மக்கள் மனநிலைக்கு ஏற்றவாறு விலை குறைப்பு செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். ஜிஎஸ்டி வரி நேரடியாக மத்திய அரசுக்கு செல்வதால் மத்திய அரசிடம் இருந்து கெஞ்சி கேட்டு நிதி பெற்று மக்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டியுள்ளது. வாட் வரி அறிமுகப்படுத்திய நிலையில் அதனால் ஏற்படும் இழப்பை மத்திய அரசு தர வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் ஜெயலலிதா அனுமதித்தார். ஆனால் அதில் ₹5 ஆயிரம் கோடி நிலுவையில் சென்று விட்டது.

தற்போது சின்ன வெங்காயம் விலை உயர்ந்து உள்ளது தமிழகத்தை பொறுத்த அளவில் சின்ன வெங்காயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கு எந்த பொருளும் தட்டுப்பாடு இல்லாமல் நியாயமான விலையில் கிடைக்கவே அரசு செயல்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணி கட்சிகளிடம் எந்த வித பாகுபாடும் இல்லாமல் வலுவான கூட்டணியாக அமைந்துள்ளது. 234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். தேமுதிகவை கூடிய விரைவில் பேச்சு வார்த்தைக்கு அழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Coalition talks ,Jayakumar ,interview ,Temujin , Coalition talks with Temujin soon: Minister Jayakumar interview
× RELATED எண்ணி முடிக்கவே 2...