திருவள்ளூரில் இயங்காத எஸ்கலேட்டரால் ரயில் பயணிகள் அவதி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷனில் இயங்காமல் உள்ள எஸ்கலேட்டரால், பயணிகள் சிரமப்படுகின்றனர். உடனடியாக இதை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷனில்,  ஆறு நடைமேடைகள் உள்ளன. அனைத்து ரயில்களும் செல்லும் பிரதான வழியாக திருவள்ளூர் சந்திப்பு உள்ளதால், இவ்வழியாக தினமும், 120க்கும் மேற்பட்ட பயணிகள், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்கள் மற்றும் பிற சரக்கு ரயில்கள் செல்கின்றன. பல லட்சம் பயணிகள், திருவள்ளூரை கடந்து செல்லும் நிலையில், இங்குள்ள பிளாட்பார்ம்களுக்கு செல்ல எஸ்கலேட்டர் வசதியும் உள்ளது.

இதில், முதலாவது எஸ்கலேட்டர் செயல்படவில்லை. இது குறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது: இதுகுறித்து ரயில்வே கோட்ட அலுவலகத்துக்கு பல கடிதங்கள் எழுதியும் பலனில்லை. ஒரு எஸ்கலேட்டர் இயங்காமல் வைத்துள்ளனர். இதனால், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் நலக்குறைவானவர்கள், அதிக பொருட்களுடன் வருவோர், பெரிதும் சிரமப்படுகின்றனர். ரயில்வே நிர்வாகம் உரிய தீர்வு காணாவிட்டால், போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை’ என்றனர்.

Related Stories:

>