காணாமல் போன 3 வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய ஒபுளாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (32) தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியரான இவருக்கு பிரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்களுடைய மூன்றரை வயதான மூத்த மகன் ஜிஸ்வந்த் நேற்றுமுன்தினம் மாலை 4.30 அளவில் எதிர் வீட்டிக்கு பால் வாங்குவதற்காக சென்றான். சில மணி நேரங்களில் தாய் பிரியா வந்து பார்த்தபோது ஜஸ்வந்த் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து பல இடங்களில் ஜிஸ்வந்த்தை பிரியா, அக்கம் பக்கத்தினர் தேடியும் அவரைக் காணாத நிலையில் இதுகுறித்து கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் இரவு முழுவதும்  அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் கிணறுகள் உள்ளிட்ட பகுதிகளில் தேடினர். தொடர்ந்து நேற்று மதியம் 3 மணியளவில் 3 வயது குழந்தை கிணற்றில் சடலமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர். ஆரம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>