சங்கு ஊதும் போராட்டம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து, ஐமிச்சேரி கிராம மக்கள் சங்கு ஊதும் போராட்டம் நடத்தினர். வாலாஜாபாத் ஒன்றியம் ஐமிச்சேரி ஊராட்சியில் குடிநீர் உள்பட பல்வேறு பிரச்னைகளை தீர்க்காத ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கிராம மக்கள் இணைந்து, நேற்று சங்கு ஊதும் போராட்டம் நடத்தினர். வட்ட செயலாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். அப்போது, கிராமத்தில் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். சாலை விரிவாக்கம் செய்தபோது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். நாவிட்டான் குளம் இந்து இருளர் வாழும் பகுதிக்கு மின் கம்பம் அமைத்து தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories: