விவசாயிகள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை காலை 10 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் வேளாண் பல்கலைக்கழக வல்லுநர்கள் உள்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டு புதிய வேளாண் தொழில்நுட்பம் மற்றும் பருவத்திற்கு ஏற்ற பயிர் சாகுபடி முறைகள்பற்றிய ஆலோசனைகளை வழங்க உள்ளனர். எனவே, விவசாயப் பெருமக்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகளை தெரிவிக்கலாம். மேலும் இக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>