ஆஸி. ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் சிட்சிபாஸ்: நடால் ஏமாற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் தகுதி பெற்றார். கால் இறுதியில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலுடன் (34 வயது, 2வது ரேங்க்) நேற்று மோதிய சிட்சிபாஸ் (22 வயது, 6வது ரேங்க்) 3-6, 2-6 என்ற கணக்கில் முதல் 2 செட்களையும் இழந்து பின்தங்கினார். பின்னர் கடுமையாகப் போராடிய அவர் 3-6, 2-6, 7-6 (7-4), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி அரை இறுதிக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 4 மணி, 5 நிமிடத்துக்கு நீடித்தது. அரை இறுதியில் ஜோகோவிச் (செர்பியா) - அஸ்லான் கரட்சேவ் (ரஷ்யா), சிட்சிபாஸ் (கிரீஸ்) - மெட்வதேவ் (ரஷ்யா) மோத உள்ளனர்.

Related Stories:

>