திருப்பதி மூத்த அர்ச்சகர் மாரடைப்பால் மரணம்

திருமலை: காஞ்சிபுரத்தில் உள்ள சகதங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவரத பட்டாச்சாரியா. கடந்த 2005ம் ஆண்டு முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீ வைகனாச ஆகம சாஸ்திரத்தின் ஆலோசகராக பணியாற்றி வந்தார். ஏழுமலையான் கோயில் மற்றும் 11 வைகனாச ஆகம கோயில்களின் தலைமை ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஏ.சி.சுப்பாரெட்டி மைதானத்தில் நேற்று வசந்த பஞ்சமியையொட்டி சரஸ்வதி பூஜை நடைபெற்றது. இதில் பூஜைகள் நடந்தபோது திடீரென நெஞ்சு வலிப்பதாக அவர் கூறினார். உடனே, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

Related Stories: