பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு 3 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின்  குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட  அறிக்கை: விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி  ஆய்வாளராக பணிபுரிந்த சந்திரசேகரன், வேப்பேரி காவல் நிலையத்தில்  சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த அழகர்சாமி, ராயப்பேட்டை காவல்  நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த ராஜேந்திரன்,  சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த  சிவகுமார், புனித தோமையர் மலை ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ராஜாமணி, ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக  பணிபுரிந்த  ரவிந்திரன், துறைமுக காவல் நிலையத்தில் சிறப்பு உதவி  ஆய்வாளராக பணிபுரிந்த முரளிபாபு, சென்னை, குற்றப்பிரிவு  குற்றப்புலனாய்வு துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த  கார்த்திகேயன்,

காஞ்சிபுரம் மாவட்டம்  சூணாம்பேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த  டேவிட், சென்னை பெருநகர காவல், புனித தோமையர் மலை ஆயுதப்படையில்  காவலராக பணிபுரிந்த நல்லுசாமி, அரசு அருங்காட்சியக புறக்காவல்  நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த புஷ்பநாதன்,  கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த  பழனிகுமார், டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8ம் அணியில்  காவலராக பணிபுரிந்த நெல்சன் ஆகியோர்  பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த  மிகுந்த வேதனை அடைந்தேன்.  உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில்  உயிரிழந்த  காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்  அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில்  உயிரிழந்த  காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம்  முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>