×

அமைச்சரிடமிருந்து தட்டிப்பறிக்க பாஜ பிளான்!

The Pudukottai district AIADMK is under the control of Tamil Nadu Health Minister Vijayabaskar. அக்கட்சியில் அவரை கடந்து அடுத்த கட்ட தலைவர்கள் உருவாக முடியவில்லை. இதனால் நடைபெற உள்ள தேர்தலை பொறுத்த அளவில் அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டுபவர்களே அதிமுக வேட்பாளர்கள் ஆகும் நிலை உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை பாஜ, தேர்தலை மையமாக வைத்து பல்வேறு பணிகளை இப்போதில் இருந்தே செய்து வருகிறது. அதிமுக வென்ற அறந்தாங்கி, கந்தர்வகோட்டை (தனி) தொகுதிகளை கேட்டு பெற்று விட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் பாஜவினர் உள்ளனர். இதற்காக கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் பாஜக மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் புரட்சிகவிதாசன் போட்டியிடுவதற்காக கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் மூலமாக காய் நகர்த்தி வருகிறார்.

இதேபோல அறந்தாங்கி தொகுதியில் பாஜகவின் மாநில மகளிரணி செயலாளர் கவிதா காந்த் போட்டியிட கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதிசீனிவாசன் மூலம் காய்நகர்த்தி வருகிறார். பாஜ டெல்லி மேலிடம் மூலம் அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்தாவது அறந்தாங்கி, கந்தர்வகோட்டை தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் பாஜகவினர் இப்போதில் இருந்தே மும்முரமாக இறங்கி உள்ளனர். அதிமுக கூட்டணியில் பாஜகவினர் சீட் பெற முனைப்பு காட்டி வரும் நிலையில், சீட்டுக்காக ஏற்கனவே காத்திருக்கும் அதிமுகவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Bajaj ,minister , The Pudukottai district AIADMK is under the control of Tamil Nadu Health Minister Vijayabaskar.
× RELATED உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்க...