அம்மா... தாயே... மறுபடியும் எனக்கே ‘சீட்’ தரணும்...சிறப்பு யாகம் நடத்திய அதிமுக எம்எல்ஏ

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு  சீக்கிரமே வெளியாக இருக்கு. இதனால கட்சிக்காரங்க அத்தனை பேரும் பம்பரமா சுத்த ஆரம்பிச்சுட்டாங்க. எப்படியும் இந்த தேர்தல்ல சீட் வாங்கி நாமளும் எம்எல்ஏ ஆயிடணும்னு மாவட்டம், ஒன்றியம், நகரம்ன்னு எல்லாரும் வேண்டாத தெய்வம் இல்ல. அந்த வகையில் இலைக்கட்சிக்காரங்க கோயில் கோயிலா போக ஆரம்பிச்சுட்டாங்க. போட்டி அதிகமாயிட்டதால ஆளப்பிடிக்கிறாங்க. இன்னொரு பக்கம் கோயிலுக்குப்போய் சாமிய பிடிக்கிறாங்க. சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அதிமுக சிட்டிங் எம்எல்ஏவான சின்னத்தம்பி, தன்னோட பதவிய தக்க வச்சுக்கணும்னு பிடிவாதமா இருக்காரு. தொகுதியில அவருக்கு கொஞ்சம் போட்டி அதிகமாம். அதனால சாமிக்கிட்ட வேண்டிரலாம்னு முடிவு பண்ணினாராம்.

ஆத்தூர்  கோட்டை பகுதியில இருக்குற பேமசான செல்லியம்மன் கோயில்ல சிறப்பு யாகம் நடத்தினா பதவிய பிடிக்கலாம், வீடு இல்லாதவங்களுக்கு வீடு யோகம் கிடைக்கும்னு ஐதீகம் இருக்கு. அதுக்காக, அமாவாசைக்கு அடுத்த 5ம் நாள், இந்த கோயில்ல யாகம் நடத்துவறங்களுக்கு யோகம் வருமாம். இதையறிந்த எம்எல்ஏ, வரும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு மறுபடியும் சீட் கிடைக்கணும்னு வேண்டி, சில நாளுக்கு முன்னாடி, இந்த கோயில்ல நடந்த 5ம் நாள் வளர்பிறை யாகத்துல, கலந்துக்கிட்டாரு. அம்மனை உருகி உருகி வழிபட்டாராம். இந்த  கோயில்ல யாகம் நடத்துவறங்களுக்கு பதவி கட்டாயம் கிடைக்கும்ங்கறது நம்பிக்கையில, அரசியல் கட்சி பிரமுகர்கள்,  வியாபாரிகள், ஆர்வத்தோட கலந்துக்குறது  வாடிக்கை. நம்ம எம்எல்ஏவும் பயபக்தியோட கலந்து பூஜை பண்ணிட்டாரு. ‘‘இனி எனக்குதான் சீட். அதை யாராலும் தடுக்க முடியாதுன்னு’’ ஆதரவாளர்கள்கிட்ட சொல்லிக்கிட்டு வர்றாராம்.

Related Stories:

>