சிறுத்தையிடம் சிக்காமல் தப்பிய மான்: வீடியோ வைரல்

மைசூரு: வேட்டைக்காக காத்துக்கொண்டு சாலையில் அமர்ந்திருந்த சிறுத்தையிடம் சிக்காமல் கண் இமைக்கும் நேரத்தில் மான் ஒன்று தப்பியோடிய வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. மைசூரு மாவட்டம் நாகரஹொலே தேசிய வனவிலங்கு பூங்கா பகுதியில் உள்ள கபினி நீர்த்தேக்க பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சிறுத்தை ஒன்று சாலையில் அமர்ந்தபடி காத்திருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த மான் ஒன்று சாலையில் பதுங்கியிருந்த சிறுத்தையை கண்டதும் கண் இமைக்கும் நேரத்தில் சிறுத்தையிடம் சிக்காமல் ஓடி மறைந்தது. பின்னர் வேட்டையாட காத்திருந்த சிறுத்தை ஏமாற்றத்துடன் எழுந்து செல்லும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

Related Stories:

>