×

தேர்தலை எதிர்கொள்ள கட்சி தலைவர்களுடன் ஆலோசனை: காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் தகவல்

பெங்களூரு: மாநிலத்தில் அடுத்து நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களை எதிர்கொள்ள கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ரன்தீப்சிங்சுர்ஜிவாலா தெரிவித்தார். பெங்களூரு குமரகுருபா அரசு விருந்தினர் மாளிகையில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி, பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகள், தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி அவர்களின் விருப்பங்கள் கேட்கப்படும்.

அதற்கு பின் தேர்தல் எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் எடுக்கப்படும். எந்த தேர்தலாக இருந்தாலும் கட்சியை சேர்ந்த அனைத்து தலைவர்களை அரவனைத்துக்கொண்டு முடிவு எடுக்கப்படும். எம்.எல்.ஏ. அகண்டசீனிவாஸ்மூர்த்தி மற்றும் முன்னாள் மேயர் சம்பத்ராஜ் இடையிலான பிரச்னைகள் குறித்து கட்சிக்குள் பேசி தீர்க்கப்படும். இது தொடர்பாக யாரும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கும் கட்சிக்கும் நல்லது கிடையாது.

அதே போல் நான், மாநில தலைவர் உட்பட அனைவரும் இங்கு இருக்கிறோம் தங்களின் பிரச்னைகள் குறித்து வந்து தெரிவித்தால் அதற்கு தீர்வு ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பா.ஜ. போல் முதல்வர் குறித்து அவதுறு தெரிவித்தால் நோட்டீஸ் வழங்குவது கிடையாது. எங்களுடைய கட்சி தொண்டர்களின் கட்சி’’ என்றார்.


Tags : party leaders ,election ,Congress , Election, Advisory, Congress State Officer, Information
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ல் வெளியீடு