அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு சித்தராமையாவின் சகோதரர் நன்கொடை

மைசூரு: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கு நன்கொடை வசூல் செய்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் சகோதரர் நன்கொடை வழங்கியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக நாடு முழுவதும் பக்தர்களிடம் நன்கொடை வசூல் செய்யப்படுகிறது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ராமர் கோயில் கட்டும் பணிக்கு நன்கொடை கொடுப்பதை முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

கர்நாடகாவில் கோயில் கட்டினால் நன்கொடை ெகாடுப்பேன். அயோத்தியில் கட்டும் கோயிலுக்கு கொடுக்க மாட்டேன் என்று சித்தராமையாவும், நல்லவர்களும் நேர்மையானவர்களும் கேட்டால் ெகாடுப்பதாக குமாரசாமியும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் மைசூரு மாவட்டத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஎச்பி அமைப்பினர் சித்தராமன உண்டி கிராமத்தில் உள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் வீட்டிற்கு சென்று நன்ெகாடை கேட்டனர். வீட்டில் இருந்த சித்தராமையாவின் சகோதரர் சித்தகவுடா, தனது பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்து நன்கொடை கொடுத்தார். அதை பெற்று கொண்டு, அவருக்கு ரசீது கொடுத்தனர். இந்த புகைப்படம் சமூகவளைத்தலங்களில் வைரலாகி உள்ளது.

Related Stories:

>