×

அடுத்த இரண்டாண்டுகளில் அனைத்து அரசுத்துறைகளிலும் திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை: டெல்லி அரசு அறிவிப்பு

புதுடெல்லி: திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை வசதிகளை தேசிய தலைநகரில் உள்ள அந்தந்த அலுவலகங்களில் அமைக்குமாறு டெல்லி அரசு தனது அனைத்து துறைகள், மாவட்ட அதிகாரிகள், நகராட்சி நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி நகராட்சி கவுன்சிலின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் கழிப்பிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து டெல்லி அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: அரசின் கீழ் உள்ள அனைத்து துறை அலுவலகங்களிலும் மூன்றாம் பாலினத்தவருக்கென தனி கழிப்பிடம் கட்டப்பட வேண்டும். இதனை உடனடியாக செய்ய முடியாதபட்சத்தில் ஏற்னவே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் கழிப்பறைகளை தற்காலிகமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.

டிரான்ஸ்ஜென்டர்(உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019ன்படி, மூன்றாம் பாலினத்தவர்களின் நலன்கள் பாதுகாப்பதற்கான போதுமான நடவடிக்கைகளை எடுத்து உறுதிசெய்ய வேண்டும். இதற்காக அனைத்து துறைகளின் கீழ் உள்ள பொது கட்டிடங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனி கழிப்பிடம் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.

இந்த கழிப்பிடங்களில் மூன்றாம் பாலினத்தவர்களை குறிக்கும் வகையிலான PwDs மற்றும் T குறியீடுகளை ஒட்டவேண்டும். சுயஅடையாளத்தின் பேரில் மூன்றாம் பாலினத்தவர் தொடர்ந்து ஜென்டர்பேசுடு கழிப்பறைகளை பயன்படுத்துவது தொடரும். இந்த உத்தரவுகள் என்டிஎம்சி, டெல்லி போலீஸ் கமிஷனர் தவிர, அனைத்து துறை செயலர்கள், டெல்லி கன்டோன்மென்ட் சிஇஓ மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு டெல்லி அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : government departments ,government announcement ,Delhi , Government, Transgender, Private Toilet, Government of Delhi, Notice
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...