பெட்ரோல், டீசல் காஸ் விலையேற்றத்தால் தேர்தலில் பாதிப்பிருக்காது: பா.ஜ. மாநில தலைவர் பேட்டி

கோவை: பிரதமர் மோடி வரும் 25ம் தேதி கோவை வருகிறார். இதற்கான விழா அவிநாசி சாலையிலுள்ள கொடிசியா மைதானத்தில் நடக்கிறது. பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான கால்கோள் விழா நேற்று நடந்தது. பா.ஜ. தமிழக தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய இணையமைச்சர்கள் கிஷன்ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் கால்கோளை நட்டனர். பா.ஜ. மாநில தலைவர் எல். முருகன், மகளிரணி தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் சேகர், துணை தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாநில தலைவர் எல்.முருகன் அளித்த பேட்டி: பெட்ரோல், டீசல், காஸ் விலையேற்றம்  தற்காலிகமானது. இதனால் எங்களுக்கு தேர்தலில் எந்தவித பாதிப்பும் இருக்காது. இது நாளடைவில் குறைய வாய்ப்பு உண்டு. எரிவாயு விலை நிச்சயமாக குறையும். காஸ் மானியம் நிறுத்தப்படவில்லை என்றார்.

Related Stories: