×

எளாவூர் சோதனை சாவடி வழியாக போதை பொருள் கடத்தல்: 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனை சாவடி வழியாக தொடர்ந்து போதை பொருட்கள் கடத்திவந்த 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இவ்வாறு செல்லும் சில வாகனங்களில் கஞ்சா, அபின் உள்பட போதை பொருட்கள் மற்றும் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுகிறது. இதில் சம்பந்தப்படுபவர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில், போதை பொருட்கள் கடத்தலை தடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின்படி, கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் போலீசார் தினமும் எளாவூர் சோதனைச்சாவடி மற்றும் சத்தியவேடு சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையின் போது இதுவரை 156 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை பொருட்கள் கடத்தியதாக 73 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 10க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், எஸ்பி அரவிந்தன் பரிந்துரையை ஏற்று, திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா உத்தரவின்படி, சோதனை சாவடிகளில் வழியாக தொடர்ந்து போதை பொருட்கள் கடத்தியதாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ், ஓச்சப்பன், தேனி மற்றும் கம்பம் பகுதியை சேர்ந்த பாண்டியன், கேரளாவை சேர்ந்த ஆருமோன், திருச்சியை சேர்ந்த முகமது அசாருதீன், ரவி, மணிகண்டன் மற்றும் கரிமூதின் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் டிராவல்ஸ் நடத்தி வரும்  நபர்களிடம் இருந்து 45 சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடத்தலில் ஈடுபட்ட வந்த பொன்னேரி தாலுகாவை சேர்ந்த காண்டீபன், சென்னை மணலி புது நகர் பகுதியை சேர்ந்த கிருபாகரன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Tags : Elavoor , Elavur, check post, drug, abduction, arrest
× RELATED எளாவூர் ஒருங்கிணைந்த...