×

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள், நிஃப்டி 105 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து 51,704 புள்ளிகளானது. நெஸ்லே இந்திய பங்கு 2.8%ம் ஆசியன் பெயின்ட்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் 2.5%ம் விலை குறைந்தன. எச்.டி.எஃப்.சி, மாருதி சுசூகி, கோட்டக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி பங்குகளும் விலை குறைந்து கைமாறின. எஸ்.பி.ஐ பங்கு 2.7%ம் பவர்கிரிட் பங்கு 2%ம் என்.டி.பி.சி பங்கு ஒரு சதவீதமும் விலை உயர்ந்தன.

ரிலையன்ஸ் 54.64 புள்ளிகள், எஸ்.பி.ஐ 25.73 புள்ளிகள், பவர் கிரிட் கார்ப் 16.06, பஜாஜ் ஆட்டோ 3.74, ஆக்சிஸ் வங்கி 3.08 புள்ளிகள் உயர்ந்தது. ஹெச்.டி.எஃப்.சி வங்கி 118.53, ஹெச்.டி.எஃப் 62.65, கோடக் மகிந்திரா 42.96 புள்ளிகள், ஏசியன் பெயிண்ட்ஸ் 38.92, நெஸ்ட்லே 31.05 புள்ளிகள் சரிந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 105 புள்ளிகள் சரிந்து 15,209 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.

தேசிய பங்குசந்தையில் ரிலையன்ஸ் 17.28 புள்ளிகள், அதானி போர்ட்ஸ் 8.01, எஸ்.பி.ஐ 7.75, ஹீரோ மோட்டோகார்ப் 3.26, ஹெச்.டி.எஃப்.சி லைஃப் 3.22 புள்ளிகள் உயர்ந்தது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க் 36.33, ஹெச்.டி.எஃப்.சி 19.70, நெஸ்ட்லே 9.42, பஜாஜ் பின்செர்வ் 8.98, டிசிஎஸ் 8.25 புள்ளிகள் சரிந்தது.

Tags : Sensex ,Nifty , Stock market
× RELATED சென்செக்ஸ் 17 புள்ளிகள் உயர்வு; நிஃப்டி சரிவு