தனது வெள்ளை மாளிகை வாழ்க்கை தங்கக் கூண்டில் அடைபட்டது போன்று உள்ளது!: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!!

வாஷிங்க்டன்: தனது வெள்ளை மாளிகை வாழ்க்கை தங்கக் கூண்டில் அடைபட்டிருப்பது போன்று இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஜோ பைடன் இவ்வாறு பதிலளித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ஏற்கனவே துணை அதிபராக இருந்த போது 100 முறைக்கே மேல் வெள்ளை மாளிகை வந்திருந்தாலும் அதன் உட்பகுதிகளுக்கு சென்று பார்த்ததில்லை என்றும் தற்போது தான் அதன் பிரம்மாண்டம் தெரிய வந்ததாகவும் தெரிவித்தார்.

அதிபராக பதவியேற்று 4 வாரங்கள் ஆகி இருந்தாலும் 4 ஆண்டுகள் ஓடிவிட்டதை போன்று உணர்வதாகவும், பணிகளில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்துவது இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். தங்கக் கூண்டுபோல் உள்ளது போன்று தனது வெள்ளை மாளிகை வாழ்க்கை அமைந்துள்ளது எனவும் பைடன் தெரிவித்தார். அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப்பை விட, ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20ம் தேதி ஆட்சி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>