×

சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க பாப் பாடகி விநாயகர் டாலருடன் அரை நிர்வாண ‘போஸ்’: சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த முன்னணி பாப் பாடகி ரிஹான்னா என்பவர், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த சில வாரங்களுக்கு குரல் கொடுத்தார். இவரது ஆதரவு டுவிட்டுக்கு பின்னர், பல சர்வதேச பிரபலங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். ஆனால், சர்வதே பிரபலங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய பிரபலங்கள் சச்சின் உள்ளிட்ட சிலர், ‘விவசாயிகளின் போராட்டம் என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை. இதுகுறித்து வெளியாட்கள் யாரும் கருத்துச் சொல்ல தேவையில்லை’ என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படமும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரது கழுத்தில் விநாயகர் டாலருடன் இருக்கும் ‘டாப்லெஸ்’ புகைப்படத்தை ரிஹான்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலாடையின்றி குளத்தின் ஓரத்தில் ‘சிஸ்லிங்’ போஸ் கொடுத்தார். இந்த ஃபோட்டோஷூட்டில் சில நகைகளையும் அணிந்துள்ளார். அவற்றில் ஒன்று விநாயகர் சிலையுடன் கூடிய டாலரும் இருந்தது. ரிஹான்னாவின் இந்த செயலை பலர் விரும்பவில்லை. அவர் பகிர்ந்த சிறிது நேரத்திலேயே இந்தப் புகைப்படம் வைரலானது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்தப் புகைப்படம் இருப்பதாகக் கூறி, பலரும் அவருக்கு எதிரான கருத்துகளை டுவிட்ரில் பதிவிட்டு வருகின்றனர்.


Tags : Ganesha ,American , In controversy, Ganesha with dollar, half naked, pose
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்