இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் விளையாடும் வீரர்களை அறிவித்தது பிசிசிஐ

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருப்பினும், 2 டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 317 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று, இதே மைதானத்தில் முதல் டெஸ்டில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுத்தது.

தொடர்ந்து, 3 மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கிறது. அதற்கு பின்னர், டி20 போட்டிகள் அகமதாபாத்திலும், ஒருநாள் தொடர்கள் புனேவிலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 3 மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி, விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், சுப்மான் கில், புஜாரா, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், ஷார்டிக் பாண்ட்யா,ரிஷப் பந்த், விருதிமான் சஹா, ஆர் அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, இஸ்பிரித் பும்ரா, எம்.டி.சிராஜ், ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். உடற்தகுதி மதிப்பீட்டிற்குப் பிறகு ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக, உமேஷ் யாதவ் அணியில் சேருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: