×

சென்னையில் அமைய உள்ள அமேசான் நிறுவனம் மூலமாக ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் : முதல்வர் பழனிசாமி நம்பிக்கை!!

சென்னை : சென்னையில் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ள அமேசான் நிறுவனத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு அளித்துள்ளார். அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமேசான், இந்தியாவிலும் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் ஈ-காமர்ஸ் சந்தையிலும் அமேசான் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

 இந்நிறுவனம் இந்தியாவில் தனது முதல் உற்பத்தி ஆலையை அமைக்க ஆயத்தமாகியுள்ளது. இதற்காக தமிழகத்தின் சென்னை நகரைத் தேர்ந்தெடுத்துள்ளது. சென்னையில் அமைக்கப்படும் ஆலையில் ’ஃபயர் டிவி ஸ்டிக்’ என்ற ரிமோட் வகைகளை அமேசான் நிறுவனம் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஒரு அங்கமான கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜி நிறுவனத்தின் வாயிலாக ஆயிரக்கணக்கான ஃபயர் டிவி ஸ்டிக் டிவைஸ்களை அமேசான் நிறுவனம் உற்பத்தி செய்யவிருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ள அமேசான் நிறுவனத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு அளித்துள்ளார். மேலும் அமேசான் நிறுவனம் மூலமாக ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் பழனிசாமி  நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியை முதல்வர் பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Tags : company ,Palanisamy ,Amazon ,Chennai , முதல்வர் பழனிசாமி
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...