×

அதிக மழையால் அழிந்த நெற்பயிர்-பழநி விவசாயிகள் பரிதவிப்பு

பழநி : பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. பழநி அருகே குதிரையாறு அணை பாசனத்தில் பூஞ்சோலை கிராமத்தில் சுமார் 500 ஏக்கரில் நெற்பயிர் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் பூத்து கதிர்விடும் தருணத்தில் பருவம் தவறி தொடர்மழை பெய்தது. இதில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் முழுமையாக விளைச்சல் அடையாமல் நெற்பயிர்கள் பதிர்களாக மாறி உள்ளது. நெல் விதைகள், உரம், வேலையாட்கள் கூலி என 1 ஏக்கருக்கு சுமார் 45 ஆயிரம் அளவிற்கு விவசாயிகள் செலவு செய்துள்ளனர்.

தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு சுமார் ரூ.2 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகளுக்கு இது பேரிழப்பாக உள்ளது. இதுதொடர்பாக வேளாண்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையென விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பயிர்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், மீண்டும் விவசாயம் செய்யும் வகையில் குதிரையாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palani , Palani: Palani and its surrounding villages are based on agriculture. Floriculture at Kudirayaru Dam Irrigation near Palani
× RELATED பழநியில் அனுமதியற்ற மனைகளை வாங்க வேண்டாம்