காளையார்கோவிலில் அரசு கட்டிடம் வீணாகும் அவலம்

காளையார்கோவில் :  காளையார்கோவிலில் தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தபால் அலுவலகம் அருகில் பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வேளாண் அலுவலர் குடியிருப்புக் கட்டிடம் எந்த பயன்பாடுமின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.

காளையார்கோவிலில் தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தபால் அலுவலகம் அருகில் வேளாண் அலுவலர் குடியிருப்புக் கட்டிடம் பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது.  சில காலம் ெசயல்பாட்டில் இருந்த கட்டிடம் தற்போது எந்த பயன்பாடும் இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. தனி நபரின் சாக்கு குடோனாகவும் இரவுநேர பாராகவும் விஷ பூச்சிகளின் இருப்பிடமாகவும் உள்ளது.

மக்கள் கூறுகையில், நல்ல நிலையில் உள்ள கட்டிடத்தைச் சிறிதளவு பராமரிப்புச் செய்து வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகங்களை இங்கு கொண்டு வரலாம். இல்லையென்றால் சுத்தம் செய்து விஷப்பூச்சிகளினால் ஏற்படும் அச்சுறுத்தலை தவிர்க்கலாம். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Related Stories:

>