×

கடவுள் எந்த சாதியையும் அங்கீகரிப்பதில்லை; வழிபட வரும் மனிதனைத்தான் கடவுள் அங்கீகரிக்கிறார் : நீதிபதிகள் கருத்து!!

மதுரை : கடவுள் எந்த சாதியையும் அங்கீகரிப்பதில்லை; வழிபட வரும் மனிதனைத்தான் கடவுள் அங்கீகரிக்கிறார் என்றும் வேறுபாடுகளுக்கு இடையே இறைவன் இருப்பதில்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். திருச்சி திருவானைக்கோவில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் விழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் குழு அமைக்க கோரி பொது நல மனு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடவுள் எந்த சமூகத்தையும் அங்கீகரிக்கவில்லை, பிரார்த்தனை செய்ய அங்கு செல்லும் மனிதனை மட்டுமே அங்கீகரிக்கிறார் என்றும் வேறுபாடுகளுக்கு இடையே இறைவன் இருப்பதில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது, கோயில் என்பது மன அமைதிக்காக தான், மனிதர்கள் இடையே பாகுபாடு உருவாக்குவதற்காக அல்ல.இறைவனை வணங்க செல்பவர்கள் மனிதாபிமானத்துடன் இருப்பதுதான் முக்கியம்.எந்தவித ஏற்றத்தாழ்வு, பாகுபாடும் கடவுள் பார்ப்பதில்லை.மனிதர்கள் மத்தியில் பாகுபாடு பார்ப்பதை கடவுள் ஏற்க மாட்டார். ஒரு கோயில் இனப்பாகுபாடு தொடர்பான பிரிவினைக்கான இடம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோயில் திருவிழாவில் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டக்கூடாது.கோயிலுக்கு செல்லும் போது வேறுபாடுகள் அனுமதிக்கப்பட்டால் அது அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும்.கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கோயிலில் வந்து தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.திருச்சி திருவானைக்கோவில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில்பி[பிரச்சனைக்கு அமைதி பேச்சு நடத்தி முடிவு எடுக்கலாம்.கோயில் இணை ஆணையர் முடிவு எடுக்க உத்தரவிடுகிறோம். வழக்கையும் தள்ளுபடி செய்கிறோம், என்று தெரிவித்தனர்.


Tags : God , நீதிபதிகள்
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?