×

நீதி நிலைத்தது!: வங்காள எழுத்தாளர் அவிஜித் ராய் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு..!!

தாகா: பங்களாதேஷில் மத அடிப்படை வாதத்துக்கு எதிரான கட்டுரைகளை எழுதிவந்த அவிஜித் ராய் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேருக்கு அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது. பங்களாதேஷில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற அவிஜித் ராய், பயங்கரவாதத்துக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பல கட்டுரைகளை எழுதி வந்தார். இதனால் பங்காதேஷை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தன. ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான தனது கருத்துக்களை பதிவு செய்து வந்தார்.

வங்காளதேசத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட அவிஜித் ராய், அமெரிக்காவில் இருந்து அடிக்கடி வங்காள தேசத்துக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.‌ இந்நிலையில் தாகா பல்கலைக்கழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு அவிஜித் ராய் வந்திருந்தார். கண்காட்சியை பார்வையிட்ட பின் வெளியே வந்த அவரை மத அடிப்படை வாத அமைப்பினர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இந்த தாக்குதலில் அவிஜித் மனைவி ரபிதா அகமது காயமடைந்தார்.

இந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்த பயங்கரவாத தடுப்பு சிறப்பு தீர்ப்பாயம் முன்னாள் ராணுவ மேஜர் சையது ஜியாவுல் ஹக் உள்ளிட்ட 5 மதவாதிகளுக்கு மரணதண்டனை விதித்துள்ளது. வைரஸ் ஆப் ஃபெயித் மற்றும் ஃப்ரம் வாக்யூம் டூ தி யூனிவெர்ஸ் உள்ளிட்ட புத்தகங்களையும் இவர் எழுதி உள்ளார். கடந்த வாரம், இந்த வழக்கில், பயங்கரவாதிகள் எட்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Avijit Roy ,death , Religious fundamentalism, Avijit, murder, 5 people, death sentence
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு