புதுச்சேரியில் புது புது திருப்பங்கள்.. முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஆளுநரின் செயலாளரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம்!!

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஆளுநரின் செயலாளரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம் அளித்துள்ளனர். புதுச்சேரியில், எம்.எல்.ஏ.க்கள் மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 2 பேரின் ராஜினாமாவை தொடர்ந்து, பெரும்பான்மை பலத்தை நாராயணசாமி தலைமையிலான அரசு இழந்தது. ஆனாலும், தனது அமைச்சரவை ராஜினாமா செய்யாது என்று நாராயணசாமி திட்டவட்டமாக அறிவித்தார். இந்த நிலையில், கவர்னர் கிரண்பேடி திடீரென மாற்றப்பட்டு தெலங்கானா கவர்னர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி அரசியலில் பெரும் குழப்பம் நிலவுகிறது. புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தற்போது திமுக மற்றும் சுயேட்சை ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது.  

இந்நிலையில் கிரண்பேடியுடன் புதுச்சேரி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு நிகழ்த்தினர். அப்போது சட்டமன்றத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு சென்று திரும்பிய எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” முதல்வர் நாராயணசாமி பதவி விலக வலியுறுத்தி சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை.சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி 14 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட மனுவை துணை நிலை ஆளுநரின் செயலாளரிடம் அளித்துள்ளோம்” என்றார்.

Related Stories:

>