×

பூமியில் டைனோசர்கள் அழிவுக்கு குறுங்கோள் காரணமல்ல : விஞ்ஞானிகள் கருத்து

பூமியில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்கள் உயிரிழப்புக்கு குறுங்கோள் மோதல் காரணமல்ல என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஹார்வர்டு பல்கலைக்கழக நடத்திய ஆய்வில், வியாழன் கிரகத்தால் தூண்டப்பட்ட வால் நட்சத்திரம் ஒன்று சூரியனை நோக்கி ஈர்த்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.அவ்வாறு சூரியனுக்கு அருகில் சென்றபோது ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கத்தினால் அந்த வால் நட்சத்திரம் உடைந்து அதன் ஒரு பகுதி பூமியின் மீது மோதியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.வால் நட்சத்திரம் மோதியதால் மெக்ஸிகோ கடற்கரையில், 94 மைல் நீளத்தில், 12 மைல் ஆழம் கொண்ட பள்ளம் உருவாகி அதன் விளைவால் சுனாமி, இருட்டு, தாவரங்கள் அழிதல் போன்ற காரணிகளால் டைனோசர் இனமே அற்றுப் போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : extinction ,scientists ,Earth , விஞ்ஞானிகள்
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...