×

கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் சர்வதேச மையம் இந்தியா: பிரதமர் மோடி உரை

ஐதராபாத்: கொரோனா தடுப்பூசி திட்டத்தின் சர்வதேச மையமாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் ஸ்ரீராமச்சந்திரா இருதய மையத்தில் 75ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசினார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் தொடக்கத்தில் இந்தியாவின் நிலையை எண்ணி உலகமே கவலைப்பட்டது என்று அவர் கூறினார். ஆனால் இன்றைக்கு கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் ஒட்டுமொத்த உலகிற்கே உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கடந்த 6 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொது சுகாதார திட்டங்களை இந்தியா கையில் எடுத்துள்ளதாக கூறினார். இந்த முயற்சிகள் ஏழை, எளியவர்கள் கண்ணியத்துடனும் வாய்ப்புகளை பெற்று வாழ்வதையே நோக்கமாக கொண்டுள்ளதாக மோடி தெரிவித்தார். இந்தியாவின் குடும்பம், வாழ்க்கை சூழல், உடற்பயிற்சி, யோகா போன்றவை கொரோனா பரவலை தடுத்ததாக அவர் கூறினார். உலகம் கொரோனா மருந்துக்கான தேவையில் இருந்த போது இந்தியா உலகின் பல நாடுகளுக்கு அவற்றை அனுப்பி வைத்ததாக மோடி தெரிவித்தார். தற்போது இந்தியா கொரோனா தடுப்பூசியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.

Tags : India ,International Center , Corona, Vaccine, Modi
× RELATED தொல்லியல் துறை ஆய்வுக்கு...