புதுச்சேரியில் தார்மீக பொறுப்புகளை உணர்ந்து அரசியலமைப்பு பணிகளை அப்பழுக்கற்ற வகையில் செய்துள்ளேன்..! கிரண்பேடி அறிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசியலமைக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன் என கிரண்பேடி ட்வீட் செய்துள்ளார். எனது அரசியலமைப்பு பணிகளை அப்பழுக்கற்ற வகையில் சிறப்பாக செய்ததாக அவர் டிவீட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடிக்கும், அந்த மாநில அரசுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வந்தது.

இதனால் கவர்னரை மாற்ற வேண்டும் என்று புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கடந்த வாரம்கூட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார். இதையடுத்து நேற்று திடீரென புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி திரும்ப பெறப்பட்டார். புதுச்சேரி கவர்னர் பொறுப்பை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: புதுச்சேரியில் அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன். தார்மீக பொறுப்புகளை உணர்ந்து அரசியலமைப்பு பணிகளை அப்பழுக்கற்ற வகையில் செய்துள்ளேன். தனக்கு துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி. புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அது மக்களின் கையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>