×

வீரியம் குறையாத கொரோனா வைரஸ்...! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது: 24.27 லட்சம் பேர் உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24.27 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,427,877 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 110,007,960 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 84,810,654 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 97,421 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனிடையே இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 கோடியை தாண்டி உயர்ந்து வருகிறது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,00,18,229 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,48,32,608 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 லட்சத்து 28 ஆயிரத்து 130 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 22,757,491 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 97,228 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Tags : victims ,deaths , Malignant corona virus ...! Worldwide, the number of victims has crossed 11 crore: 24.27 lakh deaths
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...