சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வாழை தோட்டம், பயிர்களை சேதப்படுத்தும் யானைகள்

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ளது அசகள்ளி தொட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் சிவமல்லு. இவருக்கு கிராமத்தின் வெளியே 6 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 4 ஏக்கரில் வாழை தோட்டம் வைத்தள்ளார். இந்தநிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் வாழைகளை துவம்சம் செய்து சேதப்படுத்தியது. இதனால், அவருக்கு ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து இரவில் வெளியேறும் யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருகி

றது. இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. வனத்துறையினர் உரிய நிவாரணம் பெற்று தரவேண்டும்.

மேலும், யானைகள் வராமல் தடுக்க வேண்டும். தவறினால் வனத்துறை அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.  இதே போன்று மஞ்சள்ளி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பசவராஜப்பாவுக்கு ெசாந்தமான 2 ஏக்கர்  தக்காளியை யானைகள்  நாசம் செய்ததுள்ளது. இதற்கு நிவாரணம் பெற்று தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோன்று ஒடயர பாள்யாவில் யானைகள் கூட்டம், சாலையில் நின்றுகொண்டு மறித்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

Related Stories:

>