×

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று முதல் தொடங்குகிறது

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் சாம்பல் புதன் தொடங்கி ஈஸ்டர் வரை தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இவ்வாண்டிற்கான தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி வரை நடைபெறுகிறது. தவக்காலத்தின் தொடக்க நாளாகிய இன்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்புத் திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது. கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்றாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 4ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். அதன்படி இன்று கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது.

இந்த நாற்பது நாட்கள் தவக்காலத்தின் போது பல்வேறு பக்தி வழிபாடுகள் நடைபெறும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தல், சுபநிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை தவிர்த்தல், நோன்பு இருத்தல். அசைவ உணவு தவிர்த்தல் போன்ற வகையில் தங்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள். சிலர் ஒருவேளை அல்லது இரு வேளை உணவு சாப்பிடாமல் உபவாசம் கடைப்பிடிப்பார்கள். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருச்சபைக்கு சென்று வேண்டுதல் செய்வார்கள்.

Tags : Lent ,Christians , The 40-day Lent of Christians begins today
× RELATED புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி