×

சொத்துக்காக தொழிலதிபர் கொலை: மகன், சகோதரன் அதிரடி கைது

பெங்களூரு: பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் மாதவா. சொந்தமாக நிறுவனம் நடத்தி வரும் அவருக்கு ₹100 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளது. பெங்களூருவில் தொழில் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பெங்களூரு தலக்கட்டபுரா சரகத்திற்குட்பட்ட குப்பலாளதள்ளி பகுதியில் வசித்து வந்தார். இவரது மகன் ஹரிகிருஷ்ணா (44). சிவராம் பிரசாத் என்ற சகோதரரும்  உள்ளார். இவர்களும் தொழில் செய்து வந்தனர். அதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக மகன் ஹரிகிருஷ்ணா செய்த தொழிலில் போதிய வருமானம் இல்லை. கடனுக்கு வாங்கி தொழில் செய்தார். அதிலும் முன்னேற்றம் இல்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் ஹரிகிருஷ்ணா தந்தையின் சொத்தில் சிலவற்றை விற்பனை செய்து பணம் வழங்கும்படி வற்புறுத்தினார். ஆனால் அதற்கு மாதவா மறுப்பு தெரிவித்துவிட்டார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட தொடங்கியது.

இறுதியாக தந்தையின் சொத்தை அடைவதற்கு திட்டமிட்ட ஹரிகிருஷ்ணா, சித்தப்பாவான சிவராம் பிரசாத்தின் உதவியை நாடினார். இருவரும் சேர்ந்து, மாதவாவை கொலை செய்ய திட்டமிட்டனர். அந்த கொலை தாம் செய்ததுபோன்று இருக்க கூடாது, முன்விரோதம் போன்று இருக்கவேண்டுமென்று நாடகமாடி, கூலிப்படையினருக்கு ₹25 லட்சம் பணம் கொடுத்தனர். அதன்படி கூலிப்படையினர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாதவாவை அவரது வீட்டின் அருகிலேயே கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு சென்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த தலக்கட்டபுரா போலீசார் விசாரணையில், மகனும், சகோதரனும் சேர்ந்து கூலிப்படையினரை வைத்து, மாதவாவை கொலை செய்திருப்பது உறுதியானது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்திருந்தனர்.  இதற்கிடையில் பணம் வாங்கி கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.

ஹரிகிருஷ்ணா, சிவராம் பிரசாத்தின் இருப்பிடம் கண்டுபிடிக்க செல்போன் லொகேஷனை பின்தொடர்ந்தனர். ஆனால் அவர்கள்  செல்போன் பயன்படுத்தவில்லை. இருப்பினும் குடும்பத்தினருக்கு வரும் செல்போன் அழைப்புகளை வைத்து, நேற்று 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தந்தையை கொலை செய்ததை ஒப்பு கொண்ட அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த தலக்கட்டபுரா போலீசார் மேலும் ஒரு நபரை தேடி வருகின்றனர்.

Tags : Businessman ,brother , Businessman murdered for property: Son, brother arrested in action
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்