10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபியில்  அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது. மாதத்தில் முதல் சனிக்கிழமை மற்றும் 3ம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து, தற்போது கூற இயலாது.

உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நம்மிடம் இல்லை. உருது படித்த ஆசிரியர்கள் தற்காலிகமாக சிறப்பு ஆசிரியர்கள் போன்று நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டி.ஆர்.பி. தேர்வில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். 10ம் வகுப்பிற்கு  பொதுத்தேர்வு அட்டவணை முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Related Stories:

>